Friday, July 14, 2017

Fwd: உங்களுக்குத் தெரியுமா ?































உங்களுக்குத் தெரியுமா ? 


​நம்மில் பலருக்கும் தெரியும் , பரமசிவன் பார்வதி தம்பதியினருக்கு இரண்டு ஆண் மக்கள் உண்டென்று.
சிலருக்குத் தெரியும் ஐயப்பன் பரமசிவனின் மகனென்று.
 திருமலை திருப்பதி தேவஸ்தானம் பதிப்பித்துள்ள திருப்பதி ஸ்தல புராணம் படித்த ஒரு சிலருக்குத் தெரியும் ஹனுமானும் பரமசிவனின் மகன் தானென்று.இவர்கள் இல்லாமல் வேறு சில மகன்களும் மகள்களும்  பரமசிவன் பார்வதி தம்பதியினருக்கு  உள்ளனர்.பலருக்கு அவர்களைப் பற்றி  தெரியாததால் அவர்களைப் 
பற்றி எனக்குத்  தெரிந்த
​ சில ​
 விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



​ "​
அந்தகன் 
​"​

ஆதியில் அந்தகனாயிருந்து  அந்தத்தில் பிருங்கியான  தலைமகன்.​


அந்தகன்  என்கிற குருட்டு
​க் ​
குழந்தைதான்  பரமசிவன் பார்வதியின்  முதல் மகன். கையிலாயத்தில்  சிவனும் பார்வதியும் தனிமையில் இரு
​ந்த ​
போது
 பார்வதி விளையாட்டாக  சிவனின் கண்களை மூட உலகம் இருண்டது. சிவனின் இடது கண்ணான சந்திரனையும் வலது கண்ணான சூரியனையும்  நெற்றிக் கண்ணான அக்னியையும்  மூடியதின் விளைவினால் எந்தவித ஒளியுமின்றி உலகம்
​இருளில் மூழ்கி ​
ஸ்தம்பித்தது.நெற்றிக்கண்ணையும்
​ சேர்த்து ​
மூடியதால் அதன் வெப்பம் காரணமாக சிவனின் கண்களும் பார்வதியின் கைகளும் வியர்த்தன.பார்வதியின்
​வியர்த்த ​
கைகளிலிருந்து ஒழுகிய
 வேர்வை
த்
​ துளி ​
ஒரு சொட்டு பூமியில் விழுந்து அது குழந்தையாக உருவெடுத்தது.அக்குழந்தை பிறந்த சமயத்தில் உலகம்
​ஒளியின்றி ​
இருளாக இருந்ததால் அக்குழந்தை குருடாகப் பிறந்தது.பின்னர் அ
க்குழந்தை ஹிரண்யாக்ஷனுக்கு
​(ஹிரண்யகசிபுவின் சகோதரன் )​
தத்துக்கு கொடுக்கப்பட்டு, 
தனது உ
ண்மை
யான பெற்றோர்கள் யாரென்று தெரியாமலேயே,
​ஹிரண்யாக்ஷனால் ​
 வளர்க்கப்பட்டு அந்தகாசுரன் என்று அழைக்கப் பட்டான்
​. ​
(பின் பல்வேறு
​ ​
​ 
காரண
​ ​
காரிய
ங்களுக்காக   சிவனிடமே போரிட்டு தோற்று சிவனிட
​மே ​
சரணடைந்து
​ சிவனருள் பெற்று ​அசுர கணத்திலிருந்து மாறி 
சிவ க
​ண
மாகி 
​சிவன் அருளால் ​
 பிருங்கி என்ற நாமத்தைப் பெற்றான்.
​"​
பிரிங்
​"​
 என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் வண்டு என்று பொருள். பார்வதியின் சாபத்தால் தன்  உடல் சக்தியை முழுவதும்   இழந்து சிவனருளால் மூன்றாவது காலைப்  பெற்றதாக
​புராணக் ​
கதை.​
​(
இந்தக் 
கதையை 
  இன்னுமொரு 
சமயத்தில் விரிவாகப்   பார்க்கலாம். )


ஆதியில் அந்தகன் 

அந்தத்தில் பிருங்கி ​

​ஆந்திராவில்  ஒரு கோவிலில் உள்ள பிருங்கி முனிவரின் சிலை.​
                                                                                                          

​​ 


கீழ் உள்ள இரண்டு சிற்பங்களும் ஆந்திராவில் ஹிந்துப்பூர்  அருகில் 
உள்ள  லேபக்ஷி  என்ற ஊரில் கிருக்ஷ்ணதேவராயர் ​ தம்பி அச்சுத ராயர் காலத்தில்  வீரண்ணா மற்றும் விருப்பன்ன  நாயக்கர்களால்  பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட  வீரபத்ரர்  கோவில்  நடன மண்டபத்தில்  உள்ள
​தூணில் அற்புதமாகச் ​
 செதுக்கப்பட்ட   
பிரு
ங்கி  முனிவரின் சிலை.


​ 

​  





​மகாபலிபுரத்தில் உள்ள சிற்பம்.அந்தகாசுரனை தனது சூலத்தால் குத்தி சிவன் ஏந்தியிருக்கும் காட்சி. பார்வதி கீழே அமர்ந்துள்ளாள்.​




​​ 
​ பிருங்கி  பரமசிவன் பார்வதியை வணங்கும்  காட்சி 


"​அங்காரகன்
​"

அங்காரகனுக்குள்ள  மற்ற பெயர்கள். செவ்வாய்,குஜ,மங்கள்  மற்றும்  லோகித். புராணங்களில் முருகனுடன் இணைத்து செவ்வாய் பேசப்படுகிறது.ஜோதிடத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனை வழிபட தோஷம் நிவர்த்தியாகும் என்று நம்புகிறார்கள் .சிவந்த நிறமுடைய செவ்வாய்க்கு பரிகார ஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில் என்று கூறப்படுகிறது. அங்கு அவருக்கு
​த் ​
தனி சன்னதி உண்டு.

அந்தகாசூரனுடன் பரமசிவன் உக்கிரமாக
​ப் ​
போரிடும் போது  சிவனின் முகத்தில் வழிந்த வியர்வையில் பிறந்தவன்தான் அங்காரகன்.(மங்கள்)  அவனுடன் கூடப்பிறந்தவள் அவனது சகோதரி சர்ச்சிகா. அவள் சிவனின்  நெற்றி வியர்வையில் இருந்து பிறந்தவள். நடந்த போரில்  அந்தகாசூரன் உடம்பிலிருந்து விழுந்த ஒவ்வொரு சொட்டு இரத்தமும் ஒரு அந்தகாசூரனாக மாறியதால் அவனை வெல்வது மிகவும் கடினமாக இருந்தது.எனவே அந்தகாசூரன் உடம்பிலிருந்து விழும் இரத்தத்தை குடிப்பதற்காக இவர்கள்  பிறந்தார்கள். (சில புராணங்களில் அங்காரகன், மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்த போது,  வராக  மூர்த்திக்கும் பூமாதேவிக்கும்  பிறந்தவன் என்று
​ம் ​
 சொல்லப்படுகிறது.
​)​












​"​
சர்ச்சிகா
​"​


சிவனின் மூத்த மகள்  சர்ச்சிகா. அவளது  தந்தை சிவன் அந்தகாசூரனுடன் போரிடும்போது அவ
​ர் ​
நெற்றி
​யின் ​
வியர்வைத்துளியிலிருந்து பிறந்தவள். சர்ச்சிகா என்பதற்கு சிவனின் மூன்றாவது கண்ணின் சக்தி என்று பொருள்.

​சர்ச்சிகாவிற்கு  வட இந்தியாவில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று ஒடிசா  மாநிலம்  கட்டாக் மாவட்டம் பாங்கி என்ற இடத்தில்  மகாநதியின் உப நதியான ரேணுகா நதியின் கரையில் ருசிகா
​என்கின்ற ​
 குன்றின் மேல் அமைந்துள்ளது.இக்கோவிலிலுள்ள  சிலையை பரசுராமர் அமைத்ததாக நம்பப்படுகிறது .மேலும் மகாநதியிலிருந்து ​
ருசிகா  குன்றின் அடிவாரத்திற்கு  அதன் நீரை தன் தவ வலிமையால்  
​பரசுராமர் ​
வரவைத்து அதற்கு தனது தாயார்  ரேணுகாவின் பெயரை வைத்ததாகச் சொல்லப் படுகிறது.

மற்றொரு கோயில் உத்தரப் பிரதேச மாநிலம்  மதுரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் அமைத்துள்ளது.தென்னிந்தியாவில் சர்ச்சிகாவிற்கு கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. 





​ருசிகா  குன்றின் மேல் அமைந்துள்ள சர்ச்சிகா தேவி.​


"​ஆரண்யானி "



சிவனின் மற்றொரு மகள் தான் ஆரண்யானி
​. ​
ஆரண்யானியிக்கு 
அசோக் சுந்தரி என்ற பெயருமுண்டு.இதற்கு துயரமில்லாத அழகி என்று பொருள்.
​ ( அசோக் என்றால் துயரமின்மை என்று பொருள் )​
மேலும் 
ஆரண்யானியை வெவ்வேறு வட்டாரங்களில் வனதேவதை  வனசுந்தரி வனதுர்க்கை  வன கன்னி  என்ற பல பெயர்களில் வணங்கப் படுகிறாள்.


​அமிர்தம் அடைவதற்காக திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும்,மந்திர மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு,  கடைந்த போழ்து அதிலிருந்து ஆலகாலம்,மூத்த தேவி  ​(ஜேஷ்டாதேவி) ஐராவதம்,சந்திரன், திருமகள், கற்பகத்தரு,அமிர்தம்,காமதேனு,நடனமணிகள்,தன்வந்திரி,நவநிதி,பிரம்மதண்டம்,சமந்தகமணி,கௌஸ்துபமணி சங்கு,ரத்னக்குடை,புஷ்பகவிமானம்,வெண்குதிரை போன்றவை தோன்றின.அவைகளில் இந்திரனுக்கு வெள்ளையானை (
ஐராவதம்),வெண்குதிரை (உச்சைச் சிரவம்) ,நடமணிகள்,காமதேனு,கற்பகத்தரு,ரத்னக்குடை   மற்றும் சமந்தகமணி
​ ஆகியவை கிடைக்கப் பெற்றன
​. ​
தான் பெற்ற  கற்பகத்தருவை  இந்திரன் தேவலோகத்து நந்தவனத்தில் வைத்தான்.கேட்பதைத் தரும் அதிசய மரம் அது.அதனால் அதற்கு கற்பக விருட்சம்
​,கல்பபத்மம்,கல்பதரும,​
​ மற்றும் பாவ்பாப் 
 
​என்றும் அழைக்கப்
​பட்டது.​

​ஒருமுறை பார்வதி துயரமுற்று இருந்தபோது ஒரு மாற்றத்திற்காக சிவன் பார்வதியை அழைத்துக்கொண்டு ​
​தேவலோகத்திலுள்ள நந்தவனத்திற்கு அழைத்துச் சென்றார்.அங்குள்ள ஒவ்வொரு செடிகளையும் மரங்களையும் பற்றி கூறிக்கொண்டு வந்தார்.கற்பக விருட்சம் அருகில் வந்தவுடன் அதன் அருமை பெருமைகளைக் 
கூறி,
​"
பார்வதி ​
​ இந்த கற்பகத்தருவிடம் உண்மையான பக்தியுடன் வேண்டிக் கொண்டாயானால் அது உடனே நிறைவேறும்" என்றார்.பார்வதியும் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்து விட்டு பின் பார்வதியும் சிவனும் கற்பகத்தருவை மும்முறை வலம் வந்து பின்னர் பார்வதி கண்களை மூடிக்கொண்டு மனமுருகி தனது ஒன்பது சக்திகளுடன் கூடிய அழகான பெண் ஒன்று வேண்டும் என்று கற்பகத்தரு முன்னில் பயபக்தியுடன் வேண்டிக்கொண்டாள்.பார்வதி தன் மனதில் நினைத்த நேரத்திலேயே அவள் மூச்சுக்காற்றும் சிவனின் மூச்சுக்காற்றும் இணைந்து பார்வதியின் நவசக்திகளான வெற்றி,மகிழ்ச்சி, வளமை, நிதானம், சக்தி,மரியாதை,அமைதி,களங்கமின்மை,கல்வி அனைத்தும் ஒன்றாகக்கூடி மிகவும் அழகான பெண் தோன்றினாள்.அவளுக்கு சிவன்
​ தம்பதியினர் ​
 ​
ஆரண்யானி
​ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.

பஞ்சமுகனாக இருந்து பொய் சொன்னதின் விளைவாக ஒரு தலையை இழந்து நான்முகனான பிரமனின் மகன் செந்தூரன் ​
ஆரண்யானி
​ மீது காதல் கொண்டு பார்வதியின் மகன் கணபதி துணைகொண்டு அவளை  ​மணக்கிறான்.



​ஜாம்பவந்தன் ​

 



​ஜாம்பவந்தன்  சிவன் பார்வதி மகன்  என்று ஒருசில புராணங்களிலும் பிரமனின் மகன் என்று பல புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது.இவன்  விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களையும் கண்டவன் என்று கூறப்படுகிறது.ராம அவதாரத்தில் சீதையை மீட்க ராமருக்கு துணையாகவும், கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணருக்கு மாமனாராகவும்,  கூர்ம அவதாரத்தில் ​திருப்பாற்கடலை கடையும் போது  சிவனின் மகனாக இருந்து ஒளஷதங்களை ,பிரமனின் ஆணைப்படி,திருப்பாற்கடலில் இட்டதாக  கூறப்படுகிறது. 

(​தேடுதல் தொடரும் )​


​தெரியாததை தெரிந்து கொள்வோம்.​

அறியாததை அறிந்து கொள்வோம்.

புரியாததை புரிந்து கொள்வோம்.

காணாததை கண்டு கொள்வோம்.

கேளாததை  கேட்டுக் கொள்வோம்.

உணராததை உணர்ந்து கொள்வோம்.

நுகராததை  நுகர்ந்து கொள்வோம்.


புதிய முயற்சியில் ,

இறையழகு.









                

                                                      





















--