Sunday, November 25, 2012

இ மெயிலைக் கண்டு பிடித்த தமிழர்




 மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே  இ - மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான  தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது இ - மெயிலே சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.
 ""என்னுடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.
 நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும்  இருந்தார்.
பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.
 இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி'யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.
 நான்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவன். FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினேன். இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ - மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY  எல்லாம் நான் உருவாக்கியவை.
 அதற்குப் பிறகு "மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றேன். மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். இ - மெயிலைக் கண்டுபிடித்தற்காக, அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் நானும் ஒருவன்.
  ஆனால் பலர்  தாங்கள்தாம் இ - மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் இ - மெயில் கண்டுபிடிக்க செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற  மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. நான்தான் இ மெயில் கண்டுபிடித்தேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். நான் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.

இ - மெயில்களைத் திறந்து படித்துப் பார்த்து, அவற்றுப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சொல்லவோ, இ - மெயில்களுக்குப் பதில் அனுப்பவோ இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்பட்டனர். அதனால் பில் கிளிண்டன் ஒரு போட்டியை அறிவித்தார். இந்த இ - மெயில்களைக் கையாள்வதை தானியங்கிமயமாக்குபவர்களுக்குப் பரிசு என்று அறிவித்தார். அதாவது வெள்ளை மாளிக்கைக்கு வரும் இ - மெயில்களைப்  படித்துப் பார்த்து, அந்த இ - மெயில் எதைப் பற்றியது? என்ன சொல்கிறது? குறை சொல்கிறதா? பாராட்டுகிறதா? என்ன வேண்டும் என்று அது கேட்கிறது? எதைப் பற்றிப் புகார் சொல்கிறது? இது எந்தவகையான இ - மெயில்? என்று ஒரு மனிதன் எப்படிப் படித்துப் பார்த்து முடிவெடுத்துச் செயல்படுவானோ, அதுபோல ஒரு கம்ப்யூட்டர் செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ற மென்பொருளை உருவாக்கித் தர வேண்டும். அதற்குப் பரிசு என்று அறிவித்தார்.
எனது சிறிய வயதில் எனது அப்பாவின் சொந்த ஊரான இராஜபாளையத்துக்குப் பக்கத்தில் உள்ள முகவூருக்குப் போயிருக்கிறேன். எனது அப்பாவின் அம்மா சின்னத்தாய், ஒரு சித்த மருத்துவர். அவர் அங்குள்ள மக்களுக்கு பலவிதமான நோய்களுக்கு மூலிகைகளிலான மருந்துகளைக்  கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அது இயல்பாகவே எனக்கு நமது பாரம்பரிய மருத்துவத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவம் எப்படி அறிவியல்பூர்வமாகச் செயல்படுகிறது என்ற அடிப்படையில் ஆராய்ச்சி  செய்து வருகிறேன். இன்றைய உலக மருத்துவத்துக்கு நிகரான - அதைவிட மேம்பட்ட - பல மருத்துவ வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. வெளி உலகுக்குத் தெரியாமல் ஓலைச் சுவடிகளில் மக்கி மறைந்து போனவை நிறைய.

  ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே... 2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து "அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்' (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன்.  மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன். இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்'' என்கிறார் சிவா அய்யாதுரை.
  அவருடைய கண்டுபிடிப்பான இ - மெயிலுக்குக் காப்புரிமை பெற்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, "இன்னோவேஷன் கார்ப்ஸ்' என்ற நிறுவத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதன் மூலம் இவர் வளர்ந்த நெவார்க் நகரத்தில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால், அவர்களுக்கு 1 லட்சம் டாலர் பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை அமெரிக்காவின் பிற ஊர்களுக்கு மட்டுமல்ல, சென்னை வரை இதை விரிவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்? என்று கேட்டோம்.
இந்தியாவில் 25 வயதுக்குட்பட்டோர் பாதிக்கும் மேல் - 50 கோடிக்கும் மேல் உள்ளனர். வெளிநாடுகளின் அவுட்சோர்சிங் மூலமாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பெல்லாம் வருங்காலத்தில் இந்த இளம் வயதினருக்குப் போதவே போதாது. புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலமாகத்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கண்டுபிடிப்புகளை பெரிய பெரிய பல்கலைக் கழகங்களின் மூலமாக, தொழில்நுட்பக் கல்லூரிகள் மூலமாகத்தான் உருவாக்க முடியும் என்ற மாயை இந்தியாவில் உள்ளது. உண்மையில் புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கண்டுபிடிப்பவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து தரப்பட்டாலேயே போதும். அதற்கு ஊக்கமூட்டும்விதமாகவே இந்த பரிசளிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன்'' என்ற அவரிடம், அவருடைய குடும்பத்தினரைப் பற்றிக் கேட்டோம்.

 






Tuesday, November 20, 2012

எம்.எல்.ஏ.ன்னு சொன்னா நம்ப மறுக்கிறாங்க.

.


 எம்.எல்.ஏ.ன்னு சொன்னா நம்ப மறுக்கிறாங்க.!!!!!!!!!!!




 02.03.11    மற்றவை

ந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த பத்தாம் தேதியோடு முடிவடைந்துவிட்டது.ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாக த்தோடு தொண்டர்கள் புடைசூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு முன்னாலும் குறைந்தது ஐம்பது அறுபது பேர்  'தேவ்டு' காத்து நிற்கிறார்கள். மார்க்ஸிஸ்ட் கட்சியின் மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வான நன்மாறனின் அறை மட்டும் ஆள் அரவமற்று அமைதியாய் நிற்கிறது. உள்ளே ஒரு உருவம் ஓடியாடி ஏதோ அவசரத்தில் தன் உடைமைகளை ஒரு பையில் எடுத்து அழுத்திக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால் நன்மாறன் எம்.எல்.ஏ.,
''எம்.எல்.ஏ.வுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அத கட்சிக்குக் கொடுத்துடுவேன். கட்சியின் முழுநேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம்   தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதாரம்'' என்று எளிமையாய் சிரிக்கிறார்.

நன்மாறனுக்கு இரண்டு மகன்கள். ஒரு பையன் எம்.எஸ்.சி., படித்துவிட்டு வேலை பார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ. பட்டதாரி. மனைவி சண்முகவள்ளி நன்மாறனின்  உறவினர் வீட்டுப் பெண்!

''பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்ல குடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமையாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத்துக்கு முன்னாடி  வாங்கினது. 184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து'' என்கிறார்.

நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம்.தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு  போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார்.யாரும் தன்னை குறை சொல் லிவிடக்கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன்.

வரைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்.எல்.ஏ.லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார்.  யாரும் அவருடன் இல்லை. தனி மனுஷி!

''ஒருமுறை மக்கள் பிரச்னைக்காக அரசு அலுவலகத்திற்குப் போனபோது உள்ளே விட மறுத்துட்டாங்க.எம்.எல்.ஏ.ன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு  எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடையாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க'' என்கிறார். இந்தக் காலத்திலும் எம்.எல்.ஏ. வுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருப்பவர்.

''எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்.எல்.ஏ.ன்னு நடத்துனர்கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக்கிறாங்க.

சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான்.ஊர்ல என் அம்மாவும் அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க.இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான  பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்குதான் நான் நன்றி சொல்லணும்'' என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற  எம்.எல்.ஏ.

'உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?' என்றால், பெரியதாக சிரித்தவர்... ''ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற  மாதிரி ஒரு எல்.ஐ.சி. பாலிஸி போட்டேன். அதான் என் சொத்து'' என்று நம்மை பதற்றப்பட வைக்கிறார்.

கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

''சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு வரும்போதுகூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன்.ஏ.சி.கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட் கிறார்கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?'' என்று சொல்லும் லீமாரோஸ், நன்மாறன் மாதிரியான எம்.எல்.ஏ.க்களை  அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?










தமிழின் வளமை





தமிழின்  வளமை 

Numbers in Tamil








VISIT

Monday, November 19, 2012

இயற்கை உணவும் இனிய வாழ்வும்---- வாழும் வழி-- THIRTY TIPS (படித்ததில் பிடித்தது):-





இயற்கை உணவும் இனிய வாழ்வும்---- வாழும் வழி --THIRTY TIPS   (படித்ததில் பிடித்தது):-






1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய நல்ல  புத்தகங்களைப்  படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்
.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதைத்  தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த ஒரு  சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

                                    

VISIT

திருமலை முன்னொரு காலத்தில்..............











யாராக இருந்தாலும் நடந்துதான் போகவேண்டும் என்ற நிலையில் பகலில் மட்டும் ஒரு குழுவாக சேர்ந்துதான் போய்வருவார்கள் அப்போதும் காட்டு விலங்குகளிலிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நிறைய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்களாம். மேலும் நடக்கமுடியாதவர்களை ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்வது போல டோலி கட்டி தூக்கிச் செல்வார்களாம்.




பின்னர் மோட்டார் வண்டிகளை விட்டுள்ளனர். ஆனால் வளைந்து, நெளிந்து செல்லும் பாதையில் மோட்டார் வாகனத்தில் பயணம் செய்ய முதலில் மக்கள் அச்சப்பட்டனர். அதன்பக்கத்தில் நின்று புகைப்படம் கூட எடுத்துக் கொள்வார்களாம். ஆனால் மோட்டார் வாகனத்தில் ஏறமாட்டார்களாம். இதன் காரணமாக வெறிச்சோடிய மலைப்பாதையில் எப்போதாவது ஒரு சில வண்டிகள் மட்டும் போய்வருமாம். அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக பயம் நீங்கி மக்கள் போய்வர இப்போது ஒரு நிமிடத்திற்கு ஓரு பஸ் என்று இடைவெளி இல்லாமல் போய், வந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது.


வரக்கூடியவர்களுக்கு மனதார தரிசனம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வயிராற சாப்பாடு போடவேண்டும் என்பதை மனதில் வைத்து அன்னதானம் திட்டம் துவங்கியதும் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காத அளவிற்கு கூடியது. இன்றைய தேதிக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் காலை முதல் இரவு வரை அன்னதானம் படைக்கிறார்கள் அதுவும் பிரமாதமாக.


பெரிதாக வருமானம் வராத நிலையில் உண்டியலில் போடும் பணத்திற்கு பாதுகாவலாக இரண்டு காவல்காரர்கள் வேறு நின்று கொண்டு இருப்பார்களாம். இப்போது அப்படியில்லை, வரக்கூடிய வருமானத்தை கையால் எண்ணமுடியாமல் மெஷின் போட்டுதான் எண்ணுகிறார்கள். அடுக்கி வைக்கிறார்கள், காசுகளை சல்லடைபோட்டு சலித்து பிரிக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு முறை உண்டியலை திறந்து எண்ணிய காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று ஒரே நாளில் அடிக்கடி உண்டியல் நிரம்பிவிடுவாதல் கன்வேயர் பெல்ட் மூலம் காணிக்கைகள் நேரடியாக எண்ணுமிடத்திற்கு சென்றுவிடுகின்றன.




இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதற்கு  கண்டிப்பான நிர்வாகமே காரணம் . பக்தர்களே பிரதானம் என்பதை மனதில் வைத்து அவர்களது தேவைக்கேற்ப  சுத்தமான கழிப்பறைகள், மலிவு விலையில் தங்கும் அறைகள், இலவச உணவு, சரிசமமான தரிசனம் என்பதில் கறராக இருந்தார்கள், இருக்கிறார்கள். இதுதான் ஒரு முறை திருமலைக்கு போன பக்தர்களை திரும்ப, திரும்ப திருமலைக்கு போகக்கூடியவர்களாக மாற்றியுள்ளது.








-








VISIT

வீட்டு உபயோகக் குறிப்புகள்


வீட்டு உபயோகக் குறிப்புகள் 





















--
VISIT