Thursday, August 21, 2014

HOW TO SOLVE........








​RELAX PLEASE.......​


 



One day Chitragupt told Brahma that he should stop this scheme that if ladies keep Karva Chauth vrat they will get the same husband for the next 7 janam (Re-births)
​​

Brahma asked, "Why"

Chitragupt, "Prabhu its becoming difficult to manage.
The ladies want the same husband but
the husbands want a new wife.
Its a problem to convince both".

Brahma," But this can't be stopped.
It's been going on since the Ages (beginning of the time)".

Just then Narad Muni comes and he suggested,
"On earth there is a great person called Santa Singh.
Ask him for a solution".




Chitragupt meets Santa Singh
In one minute Santa Singh solves the problem,

He advised Chitragupt,
​"​
Any lady who wants the Same Husband,
tell her she will also get the same
MOTHER IN LAW"



 






FOR MORE INFORMATIVE MAILS VISIT

Tuesday, August 5, 2014

உங்களுக்குத் தெரியுமா ??????








உங்களுக்குத் தெரியுமா ??????










தொற்று நோய்களை எதிர்க்கக் கூடிய வைட்டமின் "ஏ' சத்து எந்தக் கீரையில் அதிகமாயுள்ளது?

முள்ளங்கிக் கீரையில்!

உடம்பில் எடை கூட வேண்டுமானால் எந்தப்பழத்தைச் சாப்பிட வேண்டும்?

வாழைப்பழம்!

​​


பழங்களில் அதிக ஊட்டச் சத்து உள்ளது எது?

வில்வப்பழம்!

தாய்ப்பால் பெருகுவதற்காக எதைக் கஞ்சி வைத்துச் சாப்பிட வேண்டும்?

வெந்தயம்!

எந்தப் பழத்தில் கால்சியம் எனும் சுண்ணாம்புச் சத்து அதிகமாக
உள்ளது?

சீத்தாப்பழம்.!

உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து எதில் அதிக அளவில் உள்ளது?

நிலக்கடலை!

இரத்த அழுத்தம், இதயநோய் இவற்றைக் குணப்படுத்தக் கூடியது எது?

வெள்ளைப்பூண்டு!





FOR MORE INFORMATIVE MAILS VISIT

Friday, August 1, 2014

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள் :-











கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள் :-

கத்தரிக்காயின் தாவரவியல் பெயர் சொலானம் மெலோஞ்சினா என்பதாகும். சொலானாசியே என்ற குடும்ப வகையைச் சேர்ந்த கத்தரிக்காய், முட்டை செடி மற்றும் ஆபர்ஜீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் கத்தரிக்காய் கிடைத்தாலும், முட்டை வடிவம் அல்லது நீளமாக இருக்கும் கத்தரிக்காய்கள் தான் அதிகம் பயிரிடப்படுகின்றன.

கத்தரிக்காயின் தோல்கள் மிகவும் பளபளப்பாக இருக்கும். அதன் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். உள்ளே, அதன் விதைகள் அடுக்கி வைக்கப்பட்டது போல அடர்ந்து வரிசையாகக் காணப்படும்

டைப் 2 சர்க்கரை வியாதிக்கு...

​​


கத்தரிக்காயில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இல்லாததால், இரத்தத்தில் குளூகோஸ் அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள பீனால்கள் மற்றும் குறைவான க்ளைசீமிக் இன்டெக்ஸ் ஆகியவை குளூகோஸ் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே இது டைப் 2 சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு அருமருந்தாகும்.

இதய நல
னுக்கு
​....​

கத்தரிக்காயில் உள்ள ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் ஆகியவை நெஞ்சு வலி ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகின்றன. இதில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்த ஓட்டம் இதயத்தில் சீராகப் பாய உதவுகின்றன.

மூளைக்கு...
கத்தரிக்காயில் உள்ள ஃபைட்டோநியூட்ரியெண்ட்ஸ், மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், ஞாபக சக்தியை கூர்மையாக வைத்திருக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது. அதிக மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கவும் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் பி-காம்ப்ளக்ஸுகள் உதவுகின்றன.

இரும்புச்சத்து ....
இரும்புச்சத்து அளவுக்கு அதிகமாக இருந்தால் உடலுக்குக் கெடுதிதான். கத்தரிக்காயில் உள்ள நாசுனின் என்ற வேதிப் பொருள் உடலில் உள்ள அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தை நீக்க உதவுகிறது.

உடல் எடை குறைய....
கத்தரிக்காயில் நீர்ச்சத்து மிகவும் அதிகம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அடித்து வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள மெட்டபாலிசம் ஸ்பைக் கலோரிகளை எரிக்க வல்லது. இப்படிப்பட்ட கத்தரிக்காயை நிறைய சாப்பிட்டால் உடல் எடை தானாகவே குறையும்.

செரிமானத்திற்கு...
தக்காளி மற்றும் கத்தரிக்காயினால் தயாரிக்கப்பட்ட சூப், செரிமானத்திற்கு நன்றாக உதவுகிறது. எரிச்சல், வாயு, ஹெமொராய்டுகள், கொலிட்டிஸ், பேதி உள்ளிட்ட பல விதமான வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதால், செரிமானத்திற்கு கத்தரிக்காய் ஒரு அருமையான மருந்துதான்.

பாக்டீரியா எதிர்ப்பான் ...

கத்தரிக்காயில் வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.

சருமத்திற்கு...

கத்தரிக்காயில் மினரல்கள், வைட்டமின்கள், சில நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அவை நம்முடைய தோலை ஈரப்பதமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. தோல்களில் தோன்றும் மருக்கள் உள்ளிட்டவற்றைப் போக்கவும் கத்தரிக்காய் பயன்படுகிறது.

கேசத்திற்கு...
கத்தரிக்காயில் உள்ள மினரல்கள், வைட்டமின்கள், மற்றும் அதிகமான நீர்ச்சத்து ஆகியவை தலை முடியின் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவியாக உள்ளது. தலை முடி நீண்டு, அடர்ந்து, வலிமையாக வளர இவை உதவுகின்றன. மேலும், மயிர்க் கால்களின் வளர்ச்சிக்கும், தலைமுடியின் பளபளப்புக்கும் இதில் உள்ள என்சைம்கள் துணைபுரிகின்றன.

சளிக்கு...

நேரடியாக நெருப்பில் வாட்டப்பட்ட கத்தரிக்காயின் மேல் உப்பை நன்றாகத் தடவி சாப்பிட்டால் சளி பறந்து போகுமாம்!

மலேரியா காய்ச்சல் ....
மலேரியா காய்ச்சலால் அவதிப்படுபவர்கள், வெறும் வயிற்றில் சர்க்கரை கலந்த சுட்ட கத்தரிக்காயை காலையில் சாப்பிட்டால் அது மண்ணீரலுக்கு நல்லது.

தூக்கமின்மை ....

தூக்கமின்மை இருந்தால், தினமும் மாலையில் சுட்ட கத்தரிக்காயை சாப்பிட்டு வந்தால், இரவில் நன்றாகத் தூங்கலாம்.

மூல வியாதிக்கு...

பைல்ஸ் என்னும் மூல வியாதிகளைப் போக்குவதற்கு கத்தரிக்காயின் பச்சைக் காம்புகள் அந்தக் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வலி, வீக்கத்திற்கு...

கத்தரிக்காய்களைப் பாதிப் பாதியாக வெட்டி, மஞ்சள் கலந்து நன்றாக சுட வைத்து, அதை வீக்கம் மற்றும் வலு உள்ள இடங்களில் மருந்தாகக் கட்டுவது நல்லது.

உடல் நாற்றத்தைப் போக்க...

கத்தரிக்காய் ஜூஸை உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தடவி வந்தால் உடலில் ஏற்படும் துர்நாற்றம் விலகும்.

மாற்று மருந்து
காளான் விஷத்தை முறிக்க மாற்று மருந்தாகக் கத்தரிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

தோல் வெடிப்புகளுக்கு...
மஞ்சள் கத்தரியுடன் பெட்ரோலியம் ஜெல்லியை சேர்த்து பாதம் மற்றும் விரல்களில் ஏற்படும் வெடிப்புகளுக்கு மருந்தாகத் தடவினால், அந்த வெடிப்புகள் மறையும்.

குடல் புற்றுநோய்க்கு...

கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் பலவிதமான வேதிப் பொருட்கள், பெருங்குடல் புற்றுநோயைத் தீர்க்க வல்லவையாக உள்ளன.

புகைப் பழக்கத்தை ஒழிக்க...

கத்தரிக்காயில் சிறிதளவு நிக்கோட்டின் இருப்பதால், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து மெல்ல விடுபடலாம்.

இரத்த அழுத்தத்திற்கு...

கத்தரிக்காயில் சோடியம் மிகமிகக் குறைவு என்பதால், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்.

வேதிப் பொருள்கள் ....
கத்தரிக்காயில் புரதம், வைட்டமின் சி, இரும்புச்சத்து ஆகியவை போதுமான அளவில் உள்ளன. மேலும், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் உள்ளன.

ஆஸ்துமா....

ஆஸ்துமா, கல்லடைப்பு, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு கத்தரிக்காய் அருமருந்தாக உள்ளது.




FOR MORE INFORMATIVE MAILS VISIT