Saturday, September 21, 2013

காபி உடம்புக்கு நல்லதா? கெட்டதா?





காபி உடம்புக்கு நல்லதா? கெட்டதா? சமீபத்திய ஆய்வு என்ன சொல்கிறது?

காபி உடம்புக்கு நல்லதா? கெட்டதா?
சமீபத்திய ஆய்வு என்ன சொல்கிறது?


இதை படிக்கற உங்களுக்கு சந்தோஷமும் வரலாம். தலைச்சுற்றலும் வரலாம், தலை சுற்றுகிறதே என்று டாக்டர்களிடம் போனால், இதை சொன்னதே டாக்டர்கள்தான்.

ஆனால் ஒரு நாளைக்கு 3 அல்லது 5 கப் காபி சப்பிட்டால் ஹார்ட் அட்டாக், புற்று நோய், சர்க்கரை வியாதி, பக்கவாதம் போன்ற நோய்கள் வராதாம்.

இந்த டாக்டர்களே இப்படிதான் அவர்களும் குழம்பி நம்மையும் குழப்ப வைப்பார்கள். "காபி சாப்பிட்டா பிளட் ப்ரஷர் ஆதிகமாயிடும்" என்று அந்தக் காலத்தில் இருந்து நேற்றுவரை சொன்னார்கள். ஆனால் இன்று "காபி சாப்பிட்டா உடலுக்கு நல்லது"எங்கிறார்கள்.

காபியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் உடலுக்குள் எந்த சூழ்நிலையிலும் கரையாமல் நோய்களை விரட்டி அடிக்க உதவுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதுதான் இப்போது காபி சாப்பிட்டா உடலுக்கு நல்லது என்பதற்குக் காரணமே.

காபி சாப்பிட்டால்தான் உடலில் புத்துனர்ச்சி ஏற்படுவதாக பலரும் உணருகின்றனர். இதனால் காபி குடிப்போர் எண்ணிகை அதிகமாகி விட்டது. காபி குடிப்பது பற்றி சில மருத்துவர்களிடம் கேட்ட கேள்விகள் இவை.

1, காபி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

"இந்த கேள்விக்கு இன்னும் 100 சதவீதம் சரியான பதில் கிட்டவில்லை ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் வரும் என்ற பீதி இன்றுவரை உள்ளது. ஆனால் கெட்ட்து இல்லை என்றே இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

2, ஒரு நாளைக்கு எவ்வளவு காபி சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் காப் வரை சாப்பிடலாம் என்கிறார்கள்.

3, எந்த எந்த நேரத்தில் காபி சாப்பிடலாம்?

காலையில் எழுந்ததும், காலைச் சிறுண்டிக்கும் மதிய உண்வுக்கும் இடையே மாலையில் என்று சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் வராது என்கிறார்கள்.

4, தூங்கப் போகும்போது காபி சாப்பிடலாமா?

இல்லை ஒரு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும். மேலும் தூக்கம் குறைவாக உள்ளவர்கள் காபியை தவிர்ப்பது நல்லது.

5, தலைவலி வரும்போது மாத்திரையுடன் காபி சாப்பிடுகிறார்களே, சரியா? 

தவறு. தலைவலி மாத்திரையை காபியுடன் எடுத்துக் கொள்ளக் கூடாது. தண்ணீர்தான் அதற்கு உகந்தது. மாத்திரைகளின் வீரியத்தை காபி குறைக்கும்.

6, காபியில் பொடியுடன் சிக்கரி சேர்ப்பது நல்லதா?

காபியில் 20 சதவீததிற்கும் குறைவாகவே சிக்கரி சேர்க்க வேண்டும் அதற்குமேல் என்றால் மயக்கம் தரும் பானமாகிவிடும்.

7, காபியில் சர்க்கரை எவ்வளவு சேர்க்க வேண்டும்?

சர்க்கரை அதிகமானால் உடலில் உள்ள பி விட்டமிகளை அப்புறபடுத்திவிடும். அதனால் சர்க்கரை அளவாகவே இருக்க வெண்டும். அதுவும் காலையில் அரை சர்க்கரைதான் உபயோகிக்க வேண்டும்

8, காபியை மிக சூடாக சாப்பிட்டால்தான் சிலருக்குப் பிடிக்கிறதே?

மிகமிக சூடு கூடாது. அது மென்மையான தொண்டைச் சதையை புண்ணாக்கி விடும். மிதமான சூடுதான் நல்லது. அதைவிட முக்கியம் பிரிட்ஜில் வைத்த காபியை எடுத்து சூடு பண்ணி சாப்பிடவே கூடாது. அது செரிமானத்தைக் கெடுக்கும்.

9, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு காபி ஏற்றதா?

காபி சாப்பிடுகிறவர்களுக்கு ஆரம்பகால சர்க்கரை வியாதி வராது என்கிறார்கள். ஆனால் சர்க்கரை வியாத் உள்ளவர்கள் சர்க்கரை போடாமல் காபி சாப்பிட வேண்டும். செயர்க்கை சர்க்கரை {சுகர் பிரி}யை உபயோகிக்கவே கூடாது. பிளாக் காபி இவர்களுக்கு நல்லது.

10, கர்ப்பிணிகள் காபி சாப்பிடலாமா?
  
பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி சாப்பிடுவதுதான் நல்லதாம். பக்கவாதம், நீரிழிவு, கல்லீரல், புற்றுநோய் போன்ற பாதிப்புகளில் இருந்து பெண்களை காபி காக்கும் எங்கிறார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை தேவை.

11, இதயநோய் உள்ளவர்கள் காபியை நிறுத்திவிட வேண்டுமா?

அது நேற்றுவரை இருந்த கருத்து. ஒரு நாளைக்கு 3 கப் காபி குடித்தவர்கள் மற்றவர்களை விட இதய பாதிப்பு 25 சதவீதம் குறைவாகவே உள்ளதாக இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்

12, காபியை அதிகம் சாப்பிட்டால் தலைச் சுற்றல், மயக்கம் ஏற்படுவது உண்டாமே?

அளவுக்கு மிஞ்சினால்தான் அந்த நிலை அளவான காபி தலைச்சுற்றலை தலைவலியையும் மயக்கத்தையும் தவிர்க்கும் என்கிறார்கள்.

13, காபி குடித்தால் கேன்சர் வருமா?

காபி குடித்தால் கல்லீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைவதாக அமெரிக்க நிபுணர்கள் கூறுகிறார்கள்.

14, குழந்தைகளுக்கு காபி தரலாமா?
காபி குழந்தைகளுக்கு குடுக்கலாமா?

பாலின் அளவைக் கூட்டி, காபி பொடியின் அளவைக் குறைத்து காபி போட்டு குழந்தைகளுக்குச் தரலாம். அது குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்படைய வைக்கிறதாம். இரவில் கண்விழித்துக் படிக்கும் மாணவர்களுக்கு காபி நல்லது. அது மாணவர்களை நன்றாக படிக்க வைக்க உதவுகிறது. காரணம் மூளையின் நினைவாற்றல் காபினால் கூடுகிறாதாம்

15, சரி காபினால் என்ன பயன்?

இதயநோய், சுவாசநோய், சர்க்கரைநோய், காயங்கள், விபத்துக்கள், தொற்றுநோய், பக்கவாதம், எலும்புத் தேய்மானம் போன்ற நோய்களால் ஏற்படும் பாதிப்பை அதிகளவு காபி தடுக்கிறது. மனிதர்கள் நீண்ட நாள் வாழ காபி உதவுகிறது என்பதே இன்றைய ஆராய்ச்சி முடிவு...

நன்றி –
குமுதம் வார இதழ்

23-01-2013 








FOR MORE INFORMATIVE MAILS VISIT

No comments:

Post a Comment