Saturday, May 18, 2013

"பள்ளிகளில் சொல்லித்தராத பாரதியார் பாடல்கள் "



-





"பள்ளிகளில்  சொல்லித் தராத 
பாரதியார்  பாடல்கள் "




பொதுவாக  பள்ளிகளில்  நாம் படித்த காலங்களில் பாரதியார் பாடல்களிலிருந்து சில பாடல்களை மட்டுமே பாடமாக வைத்திருந்தார்கள் .முக்கியமாக நாட்டின் விடுதலை ,  பெண்ணுரிமை மற்றும்  குழந்தைகள்  பற்றிய பாப்பா  பாடல்களே அதில்  அதிகமாக இருந்தன .அதுவும் ஒரு பாட்டின் எல்லாக்  கண்ணிகளையும் பிரசுரிக்காமல் சில குறிப்பிட்ட கண்ணிகளை மட்டுமே பிரசுரித்திருப்பார்கள். ஏனெனில் பாரதியின் எல்லா முகங்களையும்  எல்லோரும் பார்க்கக்  கூடாதென்பதில்  அவர்கள் மிகவும் கவனத்துடன் இருந்தார்கள். இன்றும் அந்த நிலையே தொடர்கிறது.

பாரதி ஒரு தேசியக்  கவி மட்டுமல்ல,அவர் ஒரு சிறந்த  சீர்திருத்தவாதி. சமூக நீதிக் கவிஞர். சமூக அக்கறை கொண்டவர் .  அவரைப்போல வெளிப்படையாகப் பேசி எழுதியவர்கள் யாருமில்லை.அவர் பார்ப்பனர் (அந்தணர்)  குலத்தில் பிறந்திருந்தாலும் சாதி நீதியை மிகவும் கடுமையாகச்  சாடியவர்.சாதியை ஒழிப்பதில் அவர் காட்டிய தீவிரம் மிகவும் போற்றுதற்குரியது.

          பள்ளிகளில் சொல்லித்தராத பாரதியார் பாடல்களில் முதல் பாடலாக ,  பாரதியார்  அவர்கள், " உயிர் பெற்ற தமிழர் பாட்டு " என்ற தலைப்பில் புராணங்களைப் பற்றி  எழுதிய பாடல் ஒன்றை இன்று காண்போம்.

"புராணங்கள் "

உண்மையின் பேர் தெய்வம் என்போம் -அன்றி 
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம் ;
உண்மைகள் வேதங்கள் என்போம் -பிறிது 
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம் 
கடலினைத் தாவும் குரங்கும் -வெங் 
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும் 
வடமலை தாழ்ந்ததனாலே -தெற்கில் 
வந்து சமன் செயும் குட்டை முனியும் 
நதியினுள்ளே முழுகிப் போய் -அந்த 
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை 
விதியுறவே மணம் செய்த -திறல் 
வீமனும் கற்பனை என்பது கண்டோம் 
ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் -ஒன்றில் 
உண்மைஎன்றோதி  மற்றொன்று பொய்யென்னும்  
நன்று புராணங்கள் செய்தார் -அதில் 
நல்ல கவிதை பலப்பல தந்தார் 
கவிதை மிகநல்ல தேனும் -அக் 
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம் 
புவிதனில் வாழ்நெறி காட்டி -நன்மை 
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.



       (  இன்னுமுண்டு )  




FOR MORE INFORMATIVE MAILS VISIT















No comments:

Post a Comment