Saturday, May 18, 2013

DEEPAVALI IS NOT CELEBARATED BY MONTEITH AYYANKARS



-





"மாண்டியத் அய்யங்கார்கள்  தீபாவளியைக்  கொண்டாடுவதில்லை" 









கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கும் மாண்டியாவிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வாழ்பவர்கள் மாண்டியத் அய்யங்கார்கள். இவர்கள் 11 ஆம் நூற்றாண்டில் திருப்பதியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். தென்கலைப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் பேசும் மொழி தமிழ் அதிகம் கலந்த கன்னடம் ஆகும். இதை மாண்டியத் தமிழ் என்பர். (பாலக்காடு தமிழ் போல)
வைணவர்களாக இவர்கள் இருந்த போதும் தீபாவளியைக்  கொண்டாடததிற்கு காரணம் கீழ்க்கண்ட நிகழ்ச்சியே .


                                                1790 ல்  மைசூர் மகாராணியாக இருந்தவர்  ராணி லக்ஷ்ம்மன்னி.அவருடைய பிரதம மந்திரி  திருமலை அய்யங்கார்.அவரது தம்பி நாராயண அய்யங்கார். இவர்கள் இருவரது துணையுடன் இழந்த அரியனையை திப்பு சுல்தானிடமிருந்து பெற ஆங்கிலேயர் உதவியை ராணி நாடினார்.இதற்காக ஆங்கிலேயருடன் ஒரு உடன்படிக்கை செய்யப்பட்டது .இதற்கு மூலகாரணமாக மூளையாக இருந்து செயல் பட்டவர்  திருமலை அய்யங்கார்.

                                                   அப்போது தன் அரியனையை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆங்கிலேயருடன் தீவிரமாக போர் புரிந்து கொண்டு இருந்தவ(ன் )ர் திப்பு சுல்தான் .திருமலை அய்யங்காரின்  உடன்படிக்கையைப் பற்றிக்  கேள்விப் பட்டவுடன் மிகுந்த கோபம் கொண்ட திப்பு சுல்தான் மாண்டியத் நகரில் இருந்த திருமலை அய்யங்கார் உற்றார் மற்றும்  உறவினர்கள் 700 பேரை  தீபாவளி தினத்தன்று குரூரமாக வெட்டிக் கொலை செய்தான் (ர்).

விளைவு :     மாண்டியத் அய்யங்கார்கள்  அவர்களது  மூதாதையர்கள் நினைவாக /அஞ்சலி செலுத்தும் முகமாக  தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.




FOR MORE INFORMATIVE MAILS VISIT

No comments:

Post a Comment