Sunday, November 2, 2014

மாத்தி யோசிச்சால்








ரூம் போட்டு மாத்தி யோசித்ததில் தோன்றிய ​புது மொழிகள் 


பழ மொழிகள்     மாத்தி யோசித்த போது


​1​
.
படிப்பது ராமாயணம் .இடிப்பது பெருமாள் கோயில்
​.​
  
  
படிப்பது பைபிள் இடிப்பது  மாதா கோயில்
​.


​2​
.அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்
​?​
 
  
   பக்ரீத்துக்கும் பார்ப்பானுக்கும்  என்ன சம்பந்தம் 
​?​

                                                  
​3​
.அவுசாரியில் வந்தது பெருவாரியில் போனது
​.​

   2 G ல்  வந்தது சி .பி. அய்யில்  போனது
​.


​4​
.அவுசாரியின்னு சொல்லிக்கிட்டு ஆனைமேலே ஏறலா
​ம்.
திருடின்னு சொல்லிக்கிட்டு தெருவிலே போக முடியுமா
​?
  



 அரசியல்வாதின்னு சொல்லிக்கிட்டு ஆனைமேலேபோகலாம்
​.​
 ஊழல்வாதின்னு சொல்லிக்கிட்டு ஊருக்குள் போக முடியுமா
​?​


5.
ஆட்டுக்கும் தாடி    சாயுபுக்கும் தா
​டி.

  கோமுட்டிக்கும்  பூணூல் பார்ப்பானுக்கும்  பூணூல்
​.


​6​
.ஊர்  ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
​.​
 
   
 எதிர்க்கட்சி ரெண்டு பட்டால் ஆளும் கட்சிக்கு கொண்டாட்டம்
​.​
 


​7​
.சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை
​.​
   
சுப்ரமணியருக்கு  மிஞ்சிய தெய்வமில்லை
​.​
 
 
அறிக்கை விடறதலே சாமியை மிஞ்ச ஆளில்லை 
​.​
வழக்கு போடுவதற்கு சாமியை விட்டா ஆளில்லை
​.


​8​
.தென்னை மரத்தில் தேள் கொட்டினா
​ல்​
  

பனை மரத்தில்   நெறி  கட்டும்
​.​
 
                                                                                           
 கனி மேல்  C.B.I  கேஸ்  போட்டால்
​,​


    நிதிக்கு நெஞ்சு வலிக்கும் 
.​


​9​
.மழை பெய்தும் கெடுக்கும் பெய்யாமலும் கெடுக்கும் 
​.​

 சிங் பேசாம இருந்து கெடுத்தார்
​.​
மோடி பேசியே கெடுக்கிறார்
​.​
 


​10​
.
​​கண்ணைக்
 கெடுத்த தெய்வம்தான் கோலைக் கொடுத்தது
​.​
 
  
 தண்டனை கொடுத்த கோர்ட்தான்  ஜாமீ
ன்
 கொடுத்தது 
​.



மேலே உள்ளவை  நான் மாத்தி யோசித்தது .

கீழே உள்ளவை  நீங்கள்   மாத்தி யோசிப்பதற்கு .



1.இமைக்குற்றம் கண்ணுக்கு தெரியாது .

2.எல்லோர் வீட்டு தோசையிலும் ஓட்டை .

3.கோவில் சோற்றுக்கு குமட்டின தேவடியாள்  காடிச் சோற்றுக்கு கரணம் போடுகிறாள் .

4.கரும்பு கசப்பது  வாய்க் குற்றம் .

5.அக்காளைப் பழித்து தங்கை அவுசாரியானாள்.

6.ஓணான் வேலிக்கு இழுக்கிறது. தவளை தண்ணிக்கு இழுக்கிறது.

7.இந்த அமாவாசைக்கும் வெட்கமில்லை . வருகிற அமாவாசைக்கும் வெட்கமில்லை .

8.ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதுக்கு?

9.உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆச்சு .

10.எருக்களையை வெட்டி எட்டு இடத்தில் நட்டாலும் மல்லிப்பூ பூக்காது .



உங்கள் பதிலை எதிர்நோக்கும்


அன்புடன் 

தேவசுந்தரம்










                                                                          











--

No comments:

Post a Comment