Monday, July 14, 2014

கறிவேப்பிலைக் குழம்பு












கறிவேப்பிலைக் குழம்பு

தேவையான பொருள்கள்:

உருவிய கறிவேப்பிலை : 1கப்
மிளகு 1 தேக்கரண்டி
மணத்தக்காளி வற்றல்: 2 தேக்கரண்டி
உளூத்தம் பருப்பு: 2 தேக்கரண்டி
கடலைபருப்பு : 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி : 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி : தேவையான அளவு
புளி : பெரிய எலுமிச்சம்பழம் அளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 1 மேசைக்கரண்டி
கடுகு தாளிக்க

செய்முறை:

புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். மிளகு, உளூத்தம்பருப்பு, கடலைப்பருப்பை சிறிது எண்ணெய்யில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நைஸôக அரைத்துக் கொள்ளவும். எண்ணெய்யில் மணத்தக்காளி வற்றலை வறுத்து, புளிக்கரைசல், அரைத்தவிழுது சேர்த்து, மஞ்சள்பொடி போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். மணத்தக்காளிக்குப் பதில் சுண்டைக்காய் வற்றலும் போடலாம்.
.



--
FOR MORE INFORMATIVE MAILS VISIT

No comments:

Post a Comment