Friday, July 4, 2014

படித்ததில் சிரித்த ஒன்று













ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்... பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம்... 

அவர் மனைவி.. நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்... அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்.

எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு. காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க. அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க, சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.

அதனால தான் சொல்றேன்... 

இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும். என்ன சொல்வதென்று கணவன் முழிக்க "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்று 
முத்தாய்ப்புடன் முடித்தாள்...


  





--
FOR MORE INFORMATIVE MAILS VISIT

No comments:

Post a Comment