Monday, July 7, 2014

தேனின் சில உபயோகங்கள்

.

தேனின் சில உபயோகங்கள்:




ஒரு தேக்கரண்டி தேனை காலை, மாலை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

இரவில் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தினால் நன்றாகத் தூக்கம் வரும்.

தேனில் ஊற வைத்த இஞ்சித் துண்டுகளை வெறும் வயிற்றில் உட்கொண்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.

துளசி சாற்றில் சமஅளவு தேன் கலந்து 5 நாள்கள் உட்கொள்ள வாயுக் கோளாறுகள் குணமடையும்.

வெறும் வயிற்றில் தேன் உட்கொண்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும். மறதி நீங்கும்.

வெதுவெதுப்பான நீரில் தேனை இரண்டு ஸ்பூன்விட்டு உட்கொண்டால் உடல் சோர்வு அகலும்.

கொதிக்கும் வெந்நீரைக் கை கால்களில் பட்டால் அந்த இடங்களில் தேன் தடவினால் கொப்புளம் எழாது. ரணம் ஏற்படாது.

ஒரு தேக்கரண்டி தேனுடன் இரண்டு பாதாம் பருப்பு, சிறிது வெல்லம் சேர்த்து உட்கொள்ள உடல் வலிமை பெறும்.

முருங்கை இலைச் சாற்றுடன் சமஅளவு தேன் கலந்து உட்கொள்ள குரல் தெளிவடையும்.






FOR MORE INFORMATIVE MAILS VISIT

No comments:

Post a Comment