Monday, July 7, 2014

சின்ன சின்ன தகவல்கள்


சின்ன  சின்ன தகவல்கள் 




* மாங்காய் தொக்கு போடுவதற்கு மாங்காய்களை சிரமப்பட்டுத் துருவிக் கொண்டிருக்க வேண்டாம். தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்துவிட்டால் தொக்கு செய்ய சுலபமாக இருக்கும்.

* இட்லி மாவு கடைசியில் கொஞ்சம் மிச்சம் இருக்கும்போது இட்லி செய்தால் கல் போல இருக்கும். அதனால் அந்த மாவில் இட்லி செய்யாமல் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் தேங்காய்த் துருவல் சேர்த்து அப்பக் குழியில் அப்பங்களாக்கி வேகவிட்டு மாலை நேர டிபனாக மாற்றிவிடலாம்.

* பாகற்காய் பழுத்துவிடாமல் சில நாட்கள் பாதுகாக்க வேண்டுமா? காய்களை வாங்கி வந்ததும் கழுவி வில்லைகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பைத் தூவி குலுக்கி வைத்துவிட்டால் இரண்டு மூன்று நாட்களானாலும் அப்படியே இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரையில் கூட பிரெஷ்ஷாக இருக்கும்.

* மாங்காய்களைத் தோல் சீவி, துருவி வெயிலில் உலர்த்தினால் ஒன்றிரண்டு நாட்களில் சருகாக உலர்ந்துவிடும். இதை மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டால் புளிப்புச் சுவை தேவைப்படும் அயிட்டங்களில் உபயோகித்துக் கொள்ளலாம்.

* இட்லி மாவை அரைக்கும் போதே சிலர் உப்பைச் சேர்த்து அரைத்து விடுவார்கள். அப்படிச் செய்வதைத் தவிர்த்து மாவை அரைத்து எடுத்த பிறகு உப்பு கலந்து வைத்தால் மாவு நீர்த்துப் போகாது.

* அப்பளத்தை கட்டோடு வைக்கக் கூடாது. ஒவ்வொரு அப்பளத்தையும் சுத்தமான துணியால் துடைத்து டப்பாவில் அடுக்கினால் வண்டு வராமல்

ஃப்ரஷ்ஷாக இருக்கும்.

* முருங்கைக் கீரை, அகத்திக்கீரையை வதக்கும் போது கரண்டியின் காம்புப் பகுதியை வைத்துக் கிளறினால் கட்டி விழாமல் கீரை உதிரியாக இருக்கும்.

* மாங்காய், ஆவக்காய் ஊறுகாய் போடும்போது பச்சை நல்லெண்ணெய் கிட்டதட்ட இரண்டு அங்குலம் மேலே நிற்குமாறு ஊற்றி வைத்தால் ஊறுகாய் நீண்டநாள் கெடாமலிருக்கும்.

* வெண்டைக்காய் சாம்பார், புளிக் குழம்பு வைக்கும்போது வெண்டைக்காய் உடைந்து விடாமல் இருப்பதற்கு, வதக்கும்போது இரண்டு துளி எலுமிச்சம் பழச்சாறை ஊற்றினால் வெண்டைக்காய் துண்டுகள் உடைந்து விடாமல் இருக்கும்.

* சிறிதளவு பூண்டுகள் தேவையான அளவு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நீர் சேர்க்காமல் நைஸôக அரைத்து வைத்துக் கொண்டால் புதுவித ருசியுடன் பூண்டு மிளகாய்ப்பொடி ரெடி.

ஹெல்த் டிப்ஸ்

* அலுவலக நாற்காலியில் அமர்ந்து பணிபுரியும்போது சுமாராக 45 டிகிரியளவில் சாய்வாக அமர்ந்து இருத்தல் நலம். நேராக இருப்பது முதுகெலும்பை நோக வைக்கும்.

* நூல்கோலைத் துருவி ஊற வைத்து பயத்தம் பருப்பு கலந்து, உப்புப் பிசிறி, எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிக்கான சாலட் தயார்.

* ஆயுர்வேத மருந்துகள் சாப்பிடுபவர்கள் கத்திரி, வாழைக்காய், தயிர் சாப்பிடக் கூடாது. மோர் சாப்பிடலாம்.

* கழுத்துவலி அதிகமானால் தேங்காய் எண்ணெய்யில் பச்சைக் கற்பூரத்தைச் சிறிது போட்டுச் சூடாக்கி வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.





வாழைப்பழத்திற்கு மருத்துவ குணம் உண்டு, அதன் தோலுக்கும் முக்கிய மருத்துவ குணமுள்ளது என்று பம்பாய் அணுஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். சிறுநீரகக் கல் நோயைக் குணப்படுத்தும் தன்மை வாழைப்பழத்தோலுக்கும், பசலைக்கீரைக்கும் உண்டு என்று அவர்கள் கூறுகின்றனர்.






--
FOR MORE INFORMATIVE MAILS VISIT

No comments:

Post a Comment